கூடலூர்: ராட்சதப் பாறைகள் அப்புறப்படுத்தும்போது ஏற்பட்ட அதிர்வு

73பார்த்தது
நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் மேற்பகுதியின் அருகே அமைந்துள்ள ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு முற்றிலும் இடிந்து சேதமடைந்தன. 

மேலும் சாலைகள் இடிந்து சேதம் அடைந்ததால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனிடையே மீண்டும் அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்ய ஜேசிபி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு ராட்சத பாறைகள் அப்புறப்படுத்தும் போது உண்டாகும் அதிர்வுகளால் குடியிருக்கும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்து வருகின்றன. இதனால் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படும் பகுதியைச் சுற்றிலும் தடுப்பு சுவர் அமைத்த பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி