கூடலூர், தேவன் எஸ்டேட் காப்பி தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களில் கடந்த ஒரு வாரமாக காயத்துடன் சுற்றித்திரிந்து சிறுத்தை புலியை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டு இடங்களில் கூண்டு அமைத்து கால்நடை மருத்துவ குழுவினர் வனத்துறை உதவியுடன் சிறுத்தை தேடி வந்த நிலையில், இன்று (08.06.2024) காலை தேவன் எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது. முதுமலை புலிகள் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் சிகிச்சை அளிக்க உள்ளனர் சிறுத்தை கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.