உதகையில் முன்கூட்டியே நீர் பனி

75பார்த்தது
உதகையில் முன்கூட்டியே நீர் பனி.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது லேசான மழை
மற்றும் கனமழை பெய்தது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் அளவு கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் உதகையில் முன்கூட்டியே தற்போது நீர்பனி விழத் துவங்கி உள்ளது. இன்று காலை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்பனி பெய்தது. குறிப்பாக உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர்பனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

மழை பெய்ய வேண்டிய சமயங்களில் நீர்பனி விழுவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். முன்கூட்டியே நீர்பனி விழுவதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நீர்பனி காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டாரங்களில் குளிரும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி