நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் தேயிலை தோட்டங்களை அலங்கரிக்கும் வெர்னோனியா மலர்கள்
அமெரிக்காவை தாயகமாக கொண்ட வெர்னோனியா மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் பூக்கத்துவங்கி உள்ளன. குறிப்பாக இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் ஈரப்பதமான இலையுதிர் காடுகளில் மட்டும் பூக்கக்கூடிய அரியவகை பூ ஆகும்.
வெர்னோனியா மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய மலர் என்பதால் தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள மரங்களில் பூக்கத்துவங்கி தேயிலை தோட்டங்களை அலங்கரித்து வருகிறது. இதனை கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.