சென்னை திருவான்மியூரில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டம் நடைபெறும் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு விஜய் வந்தடைந்தார். தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் கூட்டத்தில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.