18வது டாடா ஐபிஎல் 2025-ல், ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சீசனின் 8வது போட்டியில், சென்னை - பெங்களூர் அணிகள் இன்று களம் காண்கின்றன. சென்னை சேப்பாக்கம் மா.சிதம்பரம் மைதானத்தில், இரவு 07:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. மேட்ச் டிக்கெட் இருந்தால், சென்னை மெட்ரோவில் இன்று இலவசம் பயணம் வழங்கப்படுகிறது. சம அளவு திறன் கொண்ட இரு பெரும் அணிகள் இன்று மோதுகின்றன. வெற்றி யாருக்கு? காத்திருப்போம்..