1 முதல் 5ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்?

68பார்த்தது
1 முதல் 5ம் வகுப்பு தேர்வு தேதிகள் மாற்றம்?
தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பயிலும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்கூட்டியே தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முன்னதாக, தேர்வுகள் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 21 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி