தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்குவது, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதிமொழி ஏற்றார்.