வியாபாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம்

2276பார்த்தது
வியாபாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம்
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி, குன்னூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு சோதனை நடந்தது. உணவகம், தனியார் விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக கடைகளில் உள்ள காய்கறிகளை கால்நடைகள் சேதப்படுத்தி வந்தன. இதுதொ டர்பாக நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி