குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை, கரடி தொடர் நடமாட்டம்

1030பார்த்தது
கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, கருஞ்சிறுத்தை, சிறுத்தைகள் முள்ளம் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

நேற்று (19.04.2024) அதிகாலை 2 மணிக்கு அப்பகுதியில் உள்ள சாலையில் கருஞ்சிறுத்தை மெதுவாக நடந்து சென்று அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் மறைந்தது. சுமார் அரை மணி நேரத்துக்கு முன் அதே சாலையில் கரடி ஒன்றும் நடந்து சென்றது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்த தகவல் பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக் குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி