சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்வதாக பக்தர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சீனிவாசன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பிரசாதம் தரமற்றவை என தெரியவந்ததை அடுத்தே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது, எனவே அறநிலையத்துறை செய்ததில் தவறில்லை எனச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.