நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை பகுதியில் யானை தாக்கி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை சிவகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் 35. வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். விஜயராஜ் நேற்று பணி இல்லாத காரணத்தினால் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது நேற்று மாலை அவர் வீட்டின் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை வந்திருப்பதாக அருகில் இருந்தவர்கள் கூறியதை அறிந்து விஜயராஜும் காட்டு யாணையை பார்ப்பதற்காக சென்று உள்ளார். அப்போது வனதுறையினர் யானையை விரட்டிக் கொண்டிருந்தனர் விஜயராஜும் யானையை விரட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென யானை அனைவரையும் விரட்ட தொடங்கியுள்ளது. இதனால் அங்கிருந்த அனைவரும் தலைத்தெறிக்க ஓடி உள்ளனர். விஜயராஜ் கடைசியாக ஓடிய போது யானை அவரை ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசியுள்ளது. இதனால் பலத்த காயம் அடைந்த விஜயராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்த பின்னர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு விஜயராஜை கொண்டு சென்றனர் ஆனால் விஜயராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். விஜயராஜ் இறப்பு குறித்து சோலூர்மட்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.