கோத்தகிரி அருகே எல். ஐ. சி. முகவர் தற்கொலை

3317பார்த்தது
கோத்தகிரி அருகே எல். ஐ. சி. முகவர் தற்கொலை
கோத்தகிரி கேர்பட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 51). எல். ஐ. சி. முகவரான இவருக்கு திருமணமாகி மீரா (வயது 46) என்கிற மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பரமேஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக குடிக்கு அடிமையாகி அதிகமாக மது அருந்தி வந்துள்ளார் என தெரிகிறது. குடிப்பழக்கத்தை தன்னால் நிறுத்த முடியவில்லை என்கிற மனவிரக்தியில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி