நீலகிரி மாவட்டம் 60% வனப் பகுதிகளை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. புலி சிறுத்தை கரடி யானை காட்டு மாடு என பல்வேறு உயிரினங்களும் உள்ளது.
நேற்றைய தினம் குன்னூர் பகுதியில் காட்டு மாடு ஒன்று காயம் அடைந்த நிலையில் நடக்க முடியாமல் ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளது. கருணைக் கொண்டு உள்ளூர் மக்கள் தண்ணீர் கொடுத்தும் இலை தலைகளை கொடுத்தும் பாதுகாத்துள்ளனர்.
சமீப காலங்களில் உணவு பற்றாக்குறை மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வன உயிரினங்கள் மனிதர்கள் வாழும் வசிப்பிடங்களுக்குள் தஞ்சம் அடைகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுவதை காண முடிகிறது.
நேற்றைய தினம் காயத்துடன் வந்த காட்டு மாட்டிற்கு உணவு குடிநீர் வழங்கி பராமரித்துள்ளனர். அவர்கள் பசுமாடுகளை பராமரிப்பதை போல தான் நாம் பராமரிக்க முடியும். நமக்குத் தெரிந்தது இந்த அளவிற்கு தான்.
வனத்துறையினர் காட்டு மாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை குறித்து நன்றாக தெரிந்துள்ளனர் அவர்கள் வந்தால் தான் காயமடைந்து காட்டுமாட்டிற்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவார்கள் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்கு வழிவகை செய்ததாகவும் தெரிவிக்கின்றனர்.