மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்

59பார்த்தது
உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை அர்ஜுனன் என்பவர் மூளை சாவு அடைந்ததை தொடர்ந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவரது உடலுக்கு மலர் வளையும் வைத்து அஞ்சலி.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் அர்ஜுனன் (62), சரோஜா 52, தம்பதியினர் இவர்களின் மகன் கார்த்திக் 34, வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நஞ்சநாடு பகுதியில் தேயிலை பறிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணிக்கு சென்று வீடு திரும்பிய போது திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை உதவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறியதை எடுத்து அவரை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி