கடந்த சில நாட்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு இதே போன்று இமெயிலில் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில் இது வெறும் புரளி என்று கண்டுபிடித்தனர்.
உதகையில் உள்ள ஜெம்பார்க், அக்கார்ட், உட்லண்ட்ஸ், சிங்க்லர்ஸ் ஆகிய 4 பிரபல தனியார் ஓட்டல்களுக்கும் குன்னூரில் உள்ள ஸ்டேயின்ஸ் ஆங்கில பள்ளி மற்றும் சென்மேரிஸ் ஆகிய 2 பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று விடுக்கபட்டுள்ளது.
தற்பொழுது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதிகளில் காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக ஆயுத பூஜை விடுமுறையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் ஆனது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
மேலும் குன்னூரில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்