வியட்நாமின் டியான் ஜியாங்கில் உள்ள `டோங் டாம் பாம்புப் பண்ணை’ உலகின் மிகப்பெரிய பாம்பு பண்ணையாகும். சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை இந்தப் பண்ணை ஈர்த்துள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் வளர்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்ணை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் மருத்துவ தாவரங்கள் உற்பத்தி மற்றும் மருந்துகள் தயாரிப்பது ஆகும்.