நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென்னிந்திய தேயிலை வாரியம் மூலம தென்னிந்தியாவின் தரமான தேயிலை தூள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 15 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் மூலம் தென்னிந்திய தேயிலைகளை உலக அளவில் கொண்டு செல்லும் வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான தேயிலை குறித்த விழிப்ணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலா தளங்கள் மற்றும் சிறிய டீ கடைளில்
20 % கலப்பட தேயிலை தூள் உள்ளதாகவும் அவற்றை சுற்றுலாப் பயணிகள தேயிலை தூள் வாங்கும் போதே கலப்பட தேயிலையா என கண்டரிய கண்ணாடி டம்ளர் அனைத்து தேயிலை கடைகளிலும் வைக்கப்பட்டுள்ளது எனவும் வைக்கப்பட்டுள்ள தண்ணீருடன் வைக்கப்பட்டுள்ள டம்ளர் மூலமாக தேயிலை தூளில் கலப்படம் தெரிய வந்தால் குன்னூர் தேயிலை வாரியம் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தெரிவிக்கலாம் இதுப் போன்ற கடைகள் விரைவில் சீல் வைக்கப்படும் என தென்னிந்திய. தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் IAS தெரிவித்தார்.