சிலருக்கு கண்ணீர் சுரக்காமல் இருக்கும். அதைக் கண் மருத்துவத்தில் `டிரை ஐஸ்' (Dry Eyes) என்று குறிப்பிடுகின்றனர். தண்ணீர் குடிக்காமல் இருப்பது, செல்போன் திரைகளில் மூழ்குவது, உடல் வெப்பம் போன்றவை உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்துகிறது. இவை கண்களின் வறட்சிக்கு காரணமாகின்றன. இது தவிர, உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ, சில வகையான மருந்துகளின் பக்க விளைவாலோ கூட கண்களில் வறட்சி ஏற்படலாம்.