இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். தோனிக்கு ஜார்க்கண்ட் அரசால் அன்பளிப்பு பத்திரம் மூலம் ஹர்மு ஹவுசிங் காலனியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தோனி இங்குள்ள தனது வீட்டை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விசாரணையை தொடங்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தோனிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.