இந்திய வளர்ச்சிக்கு உதவிய நேருவின் தொழிற்பார்வை

68பார்த்தது
இந்திய வளர்ச்சிக்கு உதவிய நேருவின் தொழிற்பார்வை
இந்தியாவில் பிரதமராக பதவியேற்ற பின்னர் நேரு பல பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்தார். கலப்பு பொருளாதாரத்தை உருவாக்கி பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்தை ஏற்படுத்தினார். தொழிற்சாலைகள், சுரங்கங்கள், மின்சாரம், கனரக இயந்திரங்கள் ஆகியவை தனியாரிடம் போவதை தடுத்து அரசே ஏற்று நடத்த திட்டமிட்டார். நில சீரமைப்பு, விவசாய கிணறுகள் அமைப்பு, அணைகள் கட்டும் திட்டத்தை தொடங்கினார். பெரிய அணைகளை ‘இந்தியாவின் புதுக் கோயில்கள்’ என அழைத்தார். நேருவின் காலத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்து தொழில்துறையும் வளரத் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி