திருச்செங்கோடு: தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

58பார்த்தது
திருச்செங்கோடு: தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி, பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் இன்று (30-09-2024) தூய்மை பாரத இயக்கம் சார்பில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்சியர், நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி