நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ இராமலிங்க அடிகளார் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாதம் பூசத்தை முன்னிட்டு திருவீதி உலா நடைபெற்றது.
முன்பாக வள்ளலாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.