இராசிபுரம்: ராமா் கோயில் விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கல்

52பார்த்தது
இராசிபுரம்: ராமா் கோயில் விழாவுக்கு அழைப்பிதழ் வழங்கல்
அயோத்தி ராமா் கோயில் விழா ஜன. 22-இல் நடைபெறும் நிலையில், அதற்கான அழைப்பிதழ் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பாஜக நிா்வாகிகள் ராமா் கோயில் விழாவுக்கான அழைப்பிதழ்களை வீடுகள்தோறும் வழங்கி வருகின்றனா். பாஜக மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் ஆா். டி. இளங்கோ, கட்சியின் மகளிரணி மாவட்ட நிா்வாகி சுகன்யா நந்தகுமாா் ஆகியோா் தலைமையில் ராசிபுரம் நகரில் வாா்டுகள்தோறும் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனா். இந்நிகழ்வில், வி. எச். பி. நிா்வாகி ஆா். யு. ரகுபதி, ஆா். எஸ். எஸ். கௌதம், மாணிக்கம், அய்யாவு, வழக்குரைஞா் சிவலீலஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி