நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஶ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பூஜைகள் நடைபெற்றது.
பிறகு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.