தூக்கு தண்டனை விதித்த நீதிபதியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்

57பார்த்தது
கேரளா: திருவனந்தபுரம் ஷரோன் கொலைவழக்கில் குற்றவாளியான கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி ஏ.எம்.பஷீரின் கட்அவுட்டுக்கு அனைத்து கேரள ஆண்கள் சங்கம் பாலபிஷேகம் நடத்தவுள்ளது. ஷரோன்ராஜ் என்ற இளைஞரை கஷாயத்தில் விஷம் கலந்து கொன்ற வழக்கில் காதலி கிரிஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை வரவேற்று இன்று (ஜன., 22) காலை கேரள தலைமைச் செயலகம் முன் பட்டாசு வெடித்தும், நீதிபதியின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாட ஆண்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி