உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் 2 மாத மண்டல பூஜையில் ரூ.440 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று (ஜன., 21) வெளியிட்ட அறிவிப்பில், கடந்த வாரம் முடிவடைந்த 2 மாத கால மண்டல காலத்தில் கோயிலின் வருவாய் ரூ.80 கோடி அதிகரித்து ரூ.440 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட பக்தர்கள் வருகை 1 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், கோயிலுக்கு ரோப்வே அமைக்கப்படும் என தேவசம்ஸ் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்துள்ளார்.