ஆன்லைன் மூலமாக ஐடி ஊழியர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். சென்னையில் வங்லியான்சிங் (30) என்ற பெண் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நிலையில் அவரிடம் இருந்து 8,100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட வங்லியான்சிங்கிடம் திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.