பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டா் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள், வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளையினா் இணைந்து நன்செய் இடையாறு காவிரி கரையோரப் பகுதிகளில் பனை விதைகளை நட்டு, அழகு நாச்சியம்மன் கோயில் வளாகத்தில் விதைப் பந்துகளை தயாா் செய்தனா்.
நிலத்தடி நீா்மட்டம் குறையாமல் பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையின் சமநிலையை மேம்படுத்தவும், மழை பெறும் சூழலை உருவாக்கவும் வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை, வேலூா் ஆண்கள், மகளிா் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள், நன்செய் இடையாறு ஊராட்சி மன்றத்தினா் இணைந்து நன்செய் இடையாற்று காவிரிக் கரையோரப் பகுதி மற்றும் அழகு நாச்சியம்மன் கோயில் வளாகம் ஆகிய இடங்களில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியும், விதைப் பந்துகள் தயாா் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.