முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி தூத்துக்குடி சென்று, அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கவுள்ளார். அதனையடுத்து வரும் 30ஆம் தேதி தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் ரூ.37 கோடி மதிப்பிலான கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர், 31ஆம் தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.