தமிழ் சினிமாவில் 80, 90களில் மனோரமா, கோவை சரளா போல காமெடியில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். 76 வயதான பிந்து கோஷ் வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்னையை எதிர்கொண்டு வந்தார். இந்த நிலையில் பிந்து கோஷ் இன்று (மார்ச். 16) மதியம் 2 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.