ஒரு கண்ணாடி டம்ளரில் இளநீரில் உள்ள வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் ஐஸ் கட்டிகள், இளநீர் மற்றும் நன்னாரி சர்பத் ஆகியவற்றை சேர்க்கவும். தேவைப்பட்டால் இதனுடன் பாதாம் பிசின், ஊற வைத்த சப்ஜா விதைகள் ஆகியவற்றை சேர்த்து பருகலாம். இந்த சர்பத் குடிப்பதால் சிறுநீர் பெருக்கம் ஏற்படும். சிறுநீர் பாதை தொற்றுகள் சரியாகும், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்பை இது பெருமளவில் தடுக்கும்.