தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நெருக்கடி உள்ளது என அக்கட்சியின் நிர்வாகி தாடி பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி, "3 மணி நேர படத்துக்கே ஒரு வில்லன் இருக்கான். விஜய் அரசியல் பண்றாரு நெருக்கடி இருக்காதா. தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் அரியணை ஏறப்போவது உறுதி" என பேட்டியளித்துள்ளார்.