நான்கு முதல் ஐந்து நுங்குகளை தோல் சீவி மிக்ஸியில் சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேவைப்படும் அளவிற்கு பால் கலந்து, சிறிது வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் வாட்டர் எசன்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதன் மீது பொடியாக நறுக்கிய நுங்கு, 1 ஸ்பூன் ஊறவைத்த பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் தூவி பரிமாறினால், சுவையான, கோடைக்கு ஏற்ற நுங்கு பால் ரெடி.