நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினர். இதில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் வைத்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.