டி20 வரலாற்றில் 13,000 ரன்களை கடந்த 'முதல் இந்தியர்' என்ற மாபெரும் சாதனையை RCB நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்தார். மும்பை அணிக்கெதிரான போட்டியில், கோலி (386 இன்னிங்ஸ்) 17 ரன்களை கடந்தபோது இச்சாதனையை படைத்தார். மேலும், சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையும் கோலி பெற்றுள்ளார். கெய்ல் (381), அலேக்ஸ் ஹேல்ஸ் (474), சோயிப் மாலிக் (487), பொல்லார்டு (594) ஆகியோர் முதல் 4 இடத்தில் உள்ளனர்.