சென்னை: அம்பத்தூரில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பூர்ணிமா (25) என்ற பெண் திடீரென பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து தவறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் ஏறி இறங்கியதில், பூர்ணிமா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.