ரூ. 8. 70 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

65பார்த்தது
பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம்போனது.

கடந்த வார வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 580 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் கிலோ அதிகபட்சமாக ரூ. 94. 59-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90. 99 க்கும், சராசரியாக ரூ. 92. 97 க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 85. 99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 78. 88 க்கும், சராசரியாக ரூ. 83. 19 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 30 ஆயிரத்து 575-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

நிகழ்வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9, 568 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் கிலோ ஒன்று அதிகபட்சமாக ரூ. 94. 28-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 90. 49-க்கும், சராசரியாக ரூ. 92. 69-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 87. 99-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77. 99-க்கும், சராசரியாக ரூ. 83. 10-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்து 120-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி