பரமத்தி வேலூர் பகுதியில் இன்று மின்தடை

64பார்த்தது
பரமத்தி வேலூர் பகுதியில் இன்று மின்தடை
ஜேடா்பாளையம், சோழசிராமணி, நல்லூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

ஜேடா்பாளையத்தில் மின் நிறுத்த பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.

சோழசிராமணியில் மின் நிறுத்தப் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ. நல்லாகவுண்டம்பாளையம், பி. ஜி. விலசு.

நல்லூரில் மின் நிறுத்தப் பகுதிகள்: நல்லூா், கந்தம்பாளையம் மணியனூா், வைரம்பாளையம், கோலவரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூா் சித்தாளந்தூா், பெருங்குறிச்சி

டேக்ஸ் :