கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வேளாண் சார்ந்த திட்டங்கள் பரப்புரை

59பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த கலை நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களான ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், சிறந்த விவசாயிகளுக்கான விருது, நம்மாழ்வார் விருது, வேளாண் வாடகை மைய இயந்திரங்களின் மானிய திட்டங்கள், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் செயல்படுத்தப்படும் பயிற்சிகள், செயல் விளக்க திடல்கள், கண்டுணர் சுற்றுலா ஆகியவை பற்றியும் மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்வது பயன்படுத்துவது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமாக நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துக் கூறினர்.

இந்த கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜோதிமணி, ரவீனா ஆகியோர் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி