ரத்த வங்கி துவக்க மக்கள் நீதி மய்யம்  கோரிக்கை

58பார்த்தது
குமாரபாளையத்தில் ரத்த வங்கி துவக்க மக்கள் நீதி மய்யம்  மகளிரணி சார்பில் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
குமாரபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மருத்துவமனையில்  உள்நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்தத்தேவை ஏற்பட்டால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் இரத்தம் வழங்க வேண்டியுள்ளது. நாங்கள் ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தாலும்,  இரத்தம் தானம் வழங்க வருபவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அவர்களின் பணிச்சுமையின் காரணமாக திருச்செங்கோடு சென்று ரத்த தானம் செய்ய பெரும்பாலோர் விரும்புவதில்லை. இதனால் தாலுக்கா அந்தஸ்து பெற்ற குமாரபாளையம் தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி  அமைக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி