பள்ளிபாளையம்: மாசு அடைந்த நிலத்தடி நீர்; குடிநீர் தட்பாடு

65பார்த்தது
பள்ளிபாளையம் பகுதியில் விதிகள் மீறி செயல்பட்டு வரும் சாய ஆலைகளால் சாயக்கழிவுகள் நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுவதால் அப்பகுதி உள்ள நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த நீரில் ஏற்கனவே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நேற்று (நவம்பர் 19) இப்பகுதி உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்கள் மிகவும் மாசு அடைந்துள்ளது. 

கிணற்று நீர் சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் ஆகிய நிறங்களில் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தாலும் அலட்சியமாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி