உப்பளத்தில் ஒயர்கள் திருட்டு

69பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கையில பணம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு சொந்தமான உப்பளம் அகஸ்தியன் பள்ளியில் உள்ளது. இவர் உப்பளத்திற்கு தண்ணீர் இரைப்பதற்காக மின்மோட்டார் வைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி பன்னீர்செல்வம் உப்பளத்திற்கு சென்று பார்த்தபோது மின்மோட்டாரில் இணைக்கப்பட்ட பெயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி