கோடியக்கரை கடற்கரையில் ஒதுங்கிய பொருள் மெத்தபெத்தமடைன் எனும் போதைப் பொருள் என்பதும் இதன் மதிப்பு 3 கோடி ரூபாய் எனவும் கடலோர காவல் குழும காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்து கோடிக்கரை கடற்கரையில் கடந்த ஒன்றாம் தேதி பிளாஸ்டிக் டப்பா இரண்டு கரை ஒதுங்கியது. இதை கண்ட மீனவர்கள் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தந்தனர். இதை அடுத்து பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அது மெத்த பெத்தமடைன் எனும் போதை பொருள் என்பது உறுதியாகி உள்ளது. இதை எடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அப்போது கைப்பற்றப்பட்ட 2 கிலோ பொருள் மெத்த பெத்தமடைன் என்பதும் இதன் மதிப்பு ரூபாய் மூன்று கோடி என்பதும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போதை பொருள் எங்கு கடத்தப்பட்டது, யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.