தஞ்சாவூர் - Thanjavur City

தஞ்சையில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தஞ்சையில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில் அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் பிரவீன் குமார் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்ததாக பிரவீன் குமாரை கைது செய்தனர். மேலும், உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా