ஆகஸ்ட் 14, 2010-ல் உலகின் நீண்ட டிராபிக் ஜாம் சீனாவில் நிகழ்ந்தது. பெய்ஜிங்கில் 100 கி.மீ தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அந்த நகரமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசல் மிகவும் நீளமாக இருந்ததால் மக்கள் அங்கேயே சாப்பிட்டு தூங்கினர். நெடுஞ்சாலையிலேயே தற்காலிக வீடுகள், சிற்றுண்டிகள், உணவகங்கள் திறக்கப்பட்டன. ஒரு நாளைக்கு 1 கி.மீ மட்டுமே வாகனங்கள் நகர்ந்தது. இந்த டிராபிக் ஜாம் ஆகஸ்ட் 26, 2010 அன்று முடிவுக்கு வந்தது.