ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை ரிசர்வ் வங்கி இன்று முதல் முடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கி கணக்குகள், செயலற்ற வங்கி கணக்குகள் ஆகியவற்றை மோசடி நபர்கள் குறிவைப்பதால் அவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. மேலும், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை வைத்திருக்கும் வங்கி கணக்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.