2024ஆம் ஆண்டு தங்கம் உள்நாட்டு சந்தைகளில் 23% வருமானத்தைப் பெற்றுத் தந்தது. புவிசார் மற்றும் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தால் 2025ஆம் ஆண்டு உள்நாட்டில் தங்கத்தின் விலை ரூ.85,000-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் வெள்ளி மிதமாக உயர்ந்து ரூ.1.1 முதல் ரூ.1.25 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்.,30ஆம் தேதியன்று தங்கம் 10 கிராமுக்கு ரூ.82,400-ஐ எட்டியது. வெள்ளியும் அதன் செயல்திறனை 30% லாபத்துடன் பிரதிபலித்தது.