வீட்டிற்குள் புகுந்த திருடர்கள்.. வெளிநாட்டில் இருந்தபடி விரட்டிய ஓனர்

69பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேவுள்ள கோட்டார் பகுதியில், சலீம் என்பவரது வீடு உள்ளது. அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் சிலர், கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இவற்றை, வெளிநாட்டில் இருந்தபடி, சிசிடிவி மூலம் நேரலையில் சலீம் கவனித்துள்ளார். உடனடியாக, பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், “திருடன்.. திருடன்..” என கூச்சலிட்டதால், பின் கதவு வழியாக திருடர்கள் தப்பினர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி