தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பாடத்திட்டத்தை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நீட் பாடத்திட்டத்தை தெரிந்துக் கொள்ள neet.nta.nic.in மற்றும் nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்வையிட வேண்டும். 2024 தேர்வுக்கு, நீட் தேர்வு விண்ணப்பப் படிவம், தகவல் புல்லட்டின், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகியவை neet.ntaonline.in, exams.nta.ac.in/NEET/ மற்றும் nta.ac.in ஆகிய இணையதளங்களில் எடுத்துக்கொள்ளலாம்.